நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையிலான முதலாவது டி20 ஆட்டம் ஆக்லாந்தில் இன்று நடைபெற உள்ளது.
பாபர் ஆசம் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து டி20 அணியின் புதிய கேப்டன் ஷாகின் அப்ரிடியின் தலைமையில் பாகிஸ்தான் விளையாடப்போகும் முதல் போட்டி இதுவாகும்.
பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.