கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்களை மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மாணவர் வீசா வழங்கப்படுவது வரையறுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த யோசனை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், எவ்வாறான அணுகுமுறை பின்பற்றப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம் எவ்வாறு வரையறுக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.