அல்பேர்ட்டா மாகாணத்தில் மின்சாரம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாகாணத்தில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலையினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின் பயனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மின் பயனர்களுக்கும் தொலைபேசி ஊடாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இதனால் சிக்கமான மின்சாரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான குளிருடானான வானிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. மின்சாரத்திற்கான கேள்வியை நிரம்பல் செய்ய முடியாத நிலையில் மின்சாரம் தடைப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது