ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 144 ரன் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராசா 62 ரன் மற்றும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்ததன் மூலம் ராசா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது அவர் கடைசியாக விளையாடிய 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்சியாக 5 அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். கடைசி 5 சர்வதேச டி20 போட்டிகளில் ராசா அடித்த ரன்கள் விவரம், 62 (42), 65 (42), 82 (48), 65 (37), 58 (36) ரன்கள் அடித்துள்ளார்.