6 அணிகள் கலந்து கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – எம்.ஐ, கேப்டவுன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி ஜோர்டான் ஹெர்மனின் அதிரடி சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 202 ரன்கள் குவித்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கேப்டவுன் அணி களம் இறங்கியது.
கேப்டவுன் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய வேன் டெர் டுசென் 41 ரன், ரிக்கெல்டன் 58 ரன் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ஆனால் இதையடுத்து களம் இறங்கிய பிரேவிஸ் 8 ரன், லிவிங்ஸ்டன் 2 ரன், பொல்லார்ட் 24 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கேப்டவுன் அணியால் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 4 ரன் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் கேப் அணி திரில் வெற்றி பெற்றது. அதிரடியாக சதம் விளாசிய ஜோர்டான் ஹெர்மன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.