சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை 5 பேர் கொண்ட தமிழக அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், உள்ளாட்சி நிதி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவைகளை 6 மாதங்களுக்கு ஒருமுறை தணிக்கை செய்வது வழக்கம் எனவும், அந்த வகையில் பல்கலைக்கழகத்தின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்தனர்.