ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘லால் சலாம்’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது.