வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 62.1 ஓவரில் 188 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 35.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.ஆஸ்திரேலியா சார்பில் ஹசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், லயான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 6.4 ஓவரில் இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.