அருள் செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பவராக உள்ள யோகிபாபு ஒரு பெண்ணை காதல் செய்ய மாடு மேய்ப்பவனுக்கு பெண் தர மாட்டேன் என்று பெற்றோர் கூறி விட சவுதிக்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, அந்தோணி தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் துர்கா பேசியதாவது:-
யோகிபாபு திரையில் பார்ப்பது போல் நேரிலும் சிரிச்சுட்டே, சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். இளவரசு அவ்வளவு ஞானத்துடன் என்னிடம் பேசினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார். ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரிந்த இந்த படம் நாளை (24-ந் தேதி) திரைக்கு வருகிறது.