ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும்.
இதில் இந்தியா ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. தனது முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் இன்று மோதுகிறது.