ரொறன்ரோ நகரில் இன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும், நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இன்று இரவு பனிப்பொழிவு கூடுதலாக காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பியர்சன் விமான நிலையத்தில், விமானப் பயணங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.