ஜப்பானின் சைட்டாமா மாகாணம் ஷிங்கன்சென் ரெயில் நிலையத்தில் திடீரென மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அதனை சரிசெய்யும் பணியில் ரெயில்வே மற்றும் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அங்கு பல்வேறு வழித்தடங்களில் புல்லட் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்படி தலைநகர் டோக்கியோவில் இருந்து செண்டாய், நிகாட்டா மற்றும் நாகானோ ஆகிய முக்கிய நகரங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.