கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்று இருந்தன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் தங்களது பிரிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அதன்படி ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர், மும்பை சிட்டி மற்றும் ஒடிசா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
இதில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி – ஒடிசா எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.