சென்னை பல்லாவரத்தில் தி.மு.க. சார்பில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்கு செல்வார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அதே போல் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சிறைக்குப் போவார் என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் சொல்கிறேன், அவர்கள் இருவருமே விரைவில் சிறைக்கு செல்லப்போவது உறுதி.
அந்த கட்சியின் தலைவர் புகைப்படம் கூட தெரியாத அளவிற்கு தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். அ.தி.மு.க.வின் தேசிய தலைமைதான் பா.ஜ.க., அதேபோல் பா.ஜ.க.வின் மாநில கிளைதான் அ.தி.மு.க. என்பதை நான் தொடர்ந்து கூறி வருகிறேன். 2024 மக்களவை தேர்தலில் அந்த இரண்டு கட்சிகளையும் டெப்பாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.