தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்ற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் – டர்ப்ன சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டிகாக் மற்றும் க்ளாசென் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் டி காக் 83 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பார்ல் ராயல்ஸ் அணி சூப்பர் ஜெயன்ட்ஸின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பார்ல் ராயல்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.