10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியரஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
இந்த தொடரில் இன்று இரவு 8 மனிக்கு நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 44 -28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் யு மும்பா – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.