துருக்கிக்கு மீண்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.