ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 26ம் தேதி கோவையில் தொடங்கிய ஆட்டத்தில் தமிழக அணி சண்டிகரை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சண்டிகர் அணி தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 111 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஜெகதீசனின் முச்சதம் (321 ரன்), பிரதோஷ் பால் (105 ரன்), இந்திரஜித் (123 ரன்) ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 126.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 499 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய சண்டிகர் அணி 71 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 206 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 293 ரன் வித்தியாசத்தில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது,