Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுபுரோ கபடி லீக்; புனேரி பால்டன் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக்; புனேரி பால்டன் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதல்

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு பாட்னாவில் நடைபெறும் அந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Previous articleஇஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், சரக்கு கப்பல்களை கடத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்களும் கப்பல்களை கடத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரானை சேர்ந்த 17 பேர் மீன்பிடி கப்பலில் கிழக்கு சோமாலியாவின் கடற்பகுதி, ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சோமாலியா கடற்கொள்ளையர்கள் மீன்பிடி கப்பலை சிறைபிடித்தனர். மேலும், கப்பலில் இருந்த 17 பேரையும் பணய கைதிகளாக பிடித்தனர். இதையடுத்து, மீன்பிடி கப்பலில் இருந்த அனைவரும் உதவிகேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு அழைப்பு விடுத்தனர். உதவிகேட்டு அவரச அழைப்பு வந்த உடன் அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்றது. மேலும், கடத்தல் கப்பலை விட்டு உடனடியாக வெளியேறும்படி, கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை கப்பல் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து பணய கைதிகளை விடுதலை செய்த கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட ஈரான் கப்பலில் இருந்து வெளியேறினர். இதையடுத்து, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடி கப்பலில் இருந்த 17 ஈரானியர்களையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.
Next articleஎஸ்.ஏ.20 ஓவர் லீக்; டு பிளெஸ்சிஸ் அதிரடி…கேப்டவுன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments