பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பாகிஸ்தானின் சதியா இக்பாலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 718 புள்ளிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தில் சோபி எக்லெஸ்டோன் (777 புள்ளி) உள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான ரேணுகா சிங் (701 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (766 புள்ளி), தஹ்லியா மெக்ராத் (762 புள்ளி) முதல் இரு இடங்களில் உள்ளனர். இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (713 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸின் ஹேலி மேத்யூஸ் (498 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின் தீபதி சர்மா (376 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.