கனேடிய தமிழர் பேரவையின் ரொறன்ரோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
விசமிகளால் பேரவையின் ரொறன்ரோ பகுதியில் உள்ள அலுவலக கட்டடம் தீயிடப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.