12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றதை முன்னிட்டு கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஐ.எஸ்.எல்.தொடர் நடைபெறவில்லை.
கலிங்கா சூப்பர் கோப்பை தொடர் நிறைவடைந்ததை அடுத்து நேற்று ஐ.எஸ்.எல் தொடர் மீண்டும் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இந்த நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ஐதராபாத் – கோவா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.