தென் ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் – பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய எம்.ஐ.கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ரிக்கல்டன் (90 ரன்), டெவால்ட் ப்ரீவிஸ் (66 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 248 ரன்கள் குவித்தது.
கேப்பிடல்ஸ் அணி தரப்பில் பார்னெல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய கேப்பிடல்ஸ் அணியில் வெரெய்ன் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் சால்ட் 5 ரன், ஜேக்ஸ் 26 ரன், ரோசவ் மற்றும் அக்கர்மென் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெரெய்ன் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கேப்பிடல்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் கேப்டவுன் அணி வெற்றி பெற்றது.
கேப்பிடல்ஸ் அணி தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெரெய்ன் 116 ரன்கள் அடித்தார். கேப்டவுன் அணி தரப்பில் நுவான் துஷாரா 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.