Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுஎஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சூப்பர்...

எஸ்.ஏ.20 ஓவர் லீக்; சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சூப்பர் கிங்ஸ்

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) கிரிக்கெட் தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் – ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் ஸ்மட்ஸ் 55 ரன், வியான் முல்டர் 59 ரன் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் தரப்பில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 209 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டு பிளெஸ்சிஸ் மற்றும் டியு பிளாய் ஆகியோர் தலா 57 ரன் எடுத்தனர். டர்பன் அணி தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் கிங்ஸ் அணியுடன் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பார்ல் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

Previous articleடேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய டென்னிஸ் அணிக்கு மிகமுக்கிய பிரமுகர்கள்போல் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண மொத்தம் 500 பேருக்குதான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அனுமதி அளித்துள்ளது. தொடக்க நாளான நேற்று 2 ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியுடன் மோதினார். இதில் ராம்குமார் ராமநாதன் 6-7, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் ஐசம் அல் ஹக் குரேஷியை வீழ்த்தினார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் என்.ஸ்ரீராம் பாலாஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் அகீல் கானைத் தோற்கடித்தார். இதனால் குரூப் சுற்றில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில், இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பாகிஸ்தானின் முசாமில் முர்டாஸா, பர்கத் உல்லா ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.
Next articleஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments