கனடாவில் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி ஆபாசக் காட்சிகள் உருவாக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறு ஆபாச காட்சிகள் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டீப் ஃபேக் (deepfake) முறையில் படங்களை பயன்படுத்தி கனடிய யுவதிகள் இலக்கு வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியர் இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்களை கொண்டு இந்த ஆபாசக் காட்சிகள் உருவாக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான ஆபாச காட்சிகள் மற்றும் படங்களை உருவாக்குவதற்கு பாரியளவில் தொழில்நுட்ப வசதிகளும் கணனிகளும் தேவைப்பட்டன.
எனினும், தற்பொழுது சாதாரண அலைபேசி ஒன்றை மட்டும் பயன்படுத்தி ஆபாச காணொளிகள், புகைப்படங்களை தயாரிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான தொழில்நுட்ப துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டுமென கணனி வல்லுனர்கள் கோரியுள்ளனர்.