Wednesday, December 25, 2024
Google search engine
Homeஇந்தியாவிஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா - வைரல் வீடியோ

விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சை குத்திக்கொண்ட பிரேமலதா – வைரல் வீடியோ

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்தின் உருவத்தை பச்சைக் குத்தியுள்ளார்.

அழகாக வரையப்பட்டுள்ள விஜயகாந்தின் உருவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் சிரித்தப்படி விஜயகாந்த் இருக்கும் புகைப்படத்தை கையில் பச்சைக் குத்திய பிரேமலதாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments