Sunday, December 22, 2024
Google search engine
Homeஉலகம்ஏ.ஐ. மூலம் வருங்கால மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்: எப்படி கண்டுபிடித்தார்? சுவாரஸ்ய தகவல்

ஏ.ஐ. மூலம் வருங்கால மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்: எப்படி கண்டுபிடித்தார்? சுவாரஸ்ய தகவல்

ரஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்துள்ளார். சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார்.

இன்றைய விஞ்ஞான உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், நவீன வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. உலகம் முழுவதும் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடி வருகைக்குப் பின் பல்வேறு ஏ.ஐ.தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிது புதிதாக வரும் ஏ.ஐ. வசதிகளை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 23 வயதான ரஷியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் டெவலப்பர் அலெக்சாண்டர் ஜாதன் டிண்டர் என்பவர் டேட்டிங் என்ற செயலியில் தனக்குப் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.

ஏ.ஐ. தொழில்நுட்பம் கிட்டத்தட்ட 5,000 பெண்களுடன் சாட் செய்து, கரினா என்ற பெண்ணை எனக்குப் பொருத்தமானவர் என்று கண்டுபிடித்துக் கொடுத்தது. இந்த வழியில் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடிக்க சுமார் ஓராண்டு காலம் ஆனதாக அலெக்சாண்டர் ஜாதன் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டின் கடைசியில் சாட்ஜிபிடி கரினாவை தேர்ந்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்ததாகவும் கரினாவிடம் ப்ரபோஸ் செய்த பின் இருவருக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளதாகவும் ஜாதன் தெரிவித்துள்ளார்.

தான் கரினாவைக் கண்டுபிடிக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது பற்றி அவருக்குத் தெரியாது என்றும் பிறகுதான் அதைத் தெரிந்துகொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் ஒரு புரோகிராமை உருவாக்க முடியும் என்றும் ஆனால் இதுபோன்ற ஒரு திட்டத்தை உருவாக்கும்போது பல அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments