Sunday, December 22, 2024
Google search engine
Homeவிளையாட்டுசொந்த மண் ராசி இந்தியாவுக்கு கை கொடுக்குமா? ரசிகர்கள் ஆவல்

சொந்த மண் ராசி இந்தியாவுக்கு கை கொடுக்குமா? ரசிகர்கள் ஆவல்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்தியா.

இதில் இந்திய மண்ணில் இதுவரை எந்த அணியும் 390 ரன்களுக்கு மேலான இலக்கை சேசிங் செய்ததில்லை. 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 387 ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்ததே அதிகபட்ச சேசிங்காகும். அது மட்டுமின்றி இந்தியாவில் 300 ரன்களுக்கு மேல் துரத்திப்பிடிக்கப்பட்ட ஒரே இலக்கும் அதுதான். எனவே சொந்த மண் ராசி இந்தியாவுக்கு கை கொடுக்குமா? என்ற ஆவல் ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments