கனடாவில் கார் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் வாகனக் கொள்ளையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடிக்கடி கார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கத் திட்டமிட்டுள்ளாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைய ஆண்டுகளில் கார் கொள்ளைச் சம்பவங்கள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் கார் கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டில் ரொறன்ரோவில் சுமார் 12000 கார்கள் வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.