Sunday, December 22, 2024
Google search engine
Homeஉலகம்சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினிரா (வயது 74). பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி அதிபராக பதவி வகித்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.

லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments