கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சிங்காவுசி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மூவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டனர் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக வேகமாக செலுத்தப்பட்டதால் வாகனம் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.