ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.
இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் தற்போது வரை 3-வது முறையாக ஏற்பட்டுள்ளது.