இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த தொடரின் 3வது போட்டி நாளை மறுநாள் (15-ம் தேதி) தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய முன்னணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ராகுல் 2வது போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், காயத்திலிருந்து முழுவதுமாக குணமடையாததால் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ். பரத், அஸ்வின், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஜடேஜா, தேவ்தத் படிக்கல்.