பனிப்புயல் காரணமாக ரொன்ரோவின் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான சில விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் கனடாவை வலுவான பனிப்புயல் ஊடறுத்துச் செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க், நியூ ஜேர்சி, பொஸ்டன் உள்ளிட்ட சில இடங்களுக்கு ரொறன்ரோவிலிருந்து பயணம் செய்யவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் நோவா ஸ்கோஷியாவிலும் மற்றுமொரு பனிப்புயல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹாலிபெக்ஸ் விமான நிலையத்தின் விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த விமான நிலையங்கள் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் விமான பயணங்கள் தொடர்பிலான அறிவிப்புக்களை கேட்டறிந்து கொண்டு பயண ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.