இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்குகிறது
இந்த’நிலையில் இந்த போட்டி குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம்… அவர்கள் உலகின் மிகவும் கடினமான அணிகளில் ஒன்று என்றெல்லாம் நான் சொல்லமாட்டேன். வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெறுவது எளிதல்ல. அவர்கள் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுகிறார்கள். அதற்கு ஏற்ப நாமும் திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் நாங்கள் சிறுசிறு தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால் அந்த டெஸ்டில் தோற்று இருக்க மாட்டோம்.
இங்கிலாந்தின் ஆக்ரோஷமான பாணிக்கு எதிராக நாம் வேறு விதமாக முயற்சிக்க வேண்டியதில்லை. நமது ஆட்ட திட்டம் என்னவோ அதை களத்தில் செயல்படுத்தினாலே போதும். வெற்றி பெற்று விடலாம்.இங்குள்ள ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது. ஆனாலும் ஆடுகளத்தன்மை ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமாக இருக்கும். சில சமயம் பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்புக்கு கைகொடுக்கும். சில சமயம் பந்து நன்கு சுழன்று திரும்பும். சில நேரம் முதல் 2 நாட்களுக்கு பிறகு சுழல் தன்மை இருக்கும். என தெரிவித்தார்