ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த முனிச் பாதுகாப்பு மாநட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கலந்து கொண்டார். அங்கு பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரி ரியாத் அல்- மாலிக்குடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டு இருப்பதாவது: பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்திதத்தில் ரியாத் அல் மலிக்..காசா நகரில் உள்ள தற்போதைய சூழல் குறித்து நான் விவாதித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.