பிரபல சமூகவலைதளமான யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. (தலைமை செயல் அதிகாரி) சுசன் உசிஜிகி. இவரது மகன் மார்கோ டிராப்பர் (வயது 19). மார்கோ மெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் மார்கோ மயக்கநிலையில் கிடந்துள்ளார். இது குறித்து போலீசார், மருத்துவக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் மயக்க நிலையில் இருந்த மார்கோவை பரிசோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. மார்கோ அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் அதில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. மகன் பல்கலைக்கழகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.