இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடரில் தடுமாறி வரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன ஜோ ரூட் (முதல் 3டெஸ்ட்டில் 77 ரன்கள்) ‘பாஸ்பால்’ என்ற அதிரடியாக ஆடும் யுக்தியை கைவிட்டு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் வலியுறுத்தியுள்ளார்.
தனது இயல்பான பேட்டிங்கால் நிறைய ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள ஜோ ரூட், ஏன் அதை மாற்ற முயற்சிக்கிறார் என்பது புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.