12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.