ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்களில் அதிக எண்ணிக்கையிலானவை கைத்துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் கடத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.