தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாத்துறையில் பிரபல நடிகையாக திகழ்பவர் தமன்னா. சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமன்னா பங்கேற்று தனது அனுபவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:-
இளம் வயதிலேயே எனக்கு ஒரு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. அப்போது நான் சந்தித்த நபர் என்னுடைய பெயரில் ஏ மற்றும் எச் எழுத்தை கூடுதலாக சேர்த்தால் நன்றாக இருக்கும் என ஆலோசனை வழங்கினார் என்றார்.
மேலும் டிஜிட்டல் வளர்ச்சி பற்றி தமன்னா கூறும் போது, திரைப்படங்களை பார்க்க விரும்பினால் ஓ.டி.டி. மூலமும் செல்போனிலும் எங்கிருந்து வேண்டு மானாலும் பார்க்கலாம். முன்பு திரைப்படத்தை அனுபவித்து ரசித்து பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கம் சென்று தான் பார்க்க வேண்டும்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. இறப்பு என்பதை மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சப்பட தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் இழப்பு பற்றிய பயம் எனக்கு உள்ளது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்ப்பது எளிதான விஷயம் அல்ல என்று கூறினார்.