கனடாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர்ந்த பெண்ணொருவர் பணியிடத்தில் விபத்தொன்றில் பரிதாபமாக பலியானார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வான்கூவரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் யுரிடியா (Yuridia Flores, 41) என்னும் பெண். யுரிடியா, மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார். அவருக்கு ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அவரது காதலர் பெயர் Daniel Garcia Hernandez.
கடந்த புதன்கிழமை, அதாவது, பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி, யுரிடியா வேலை செய்துகொண்டிருக்கும் போது, அந்த கட்டிடத்தில் மரப்பலகைகளை தூக்கி இடம் மாற்றும் பணியில் கிரேன் ஒன்று ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.
திடீரென பெரிய மரப்பாலம் ஒன்று கிரேனிலிருந்து வழுக்கி கீழே விழ, வேலை செய்துகொண்டிருந்த யுரிடியா அதன் கீழ் சிக்கி பலியாகிவிட்டார்.
இந்த ஆண்டில் மட்டும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இதுபோல் இதுவரை மூன்று விபத்துக்கள் நிகழ்ந்துள்ள நிலையில், கிரேன் ஒபரேட்டர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில், அரசு நடவடிக்கை எடுக்க கிரேன் பணியாளர் யூனியன்கள் கோரியுள்ளன.