ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெறுகிறது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது.
இதில் முதலாவதாக டெஸ்ட் தொடரும் அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரும் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாகவும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்; ஹஸ்மத்துல்லா ஷாகிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்). இப்ராகிம் ஜட்ரான், நூர் அலி ஜட்ரான், அப்துல் மாலிக், பாஹீர் ஷா, நசீர் ஜமால், கரீம் ஜனத், காலில் குர்பாஸ், ஜாகீர் கான், சியா உர் ரெஹ்மான் அக்பர், நிஜாத் மசூத், இப்ராஹிம் அப்துல்ரஹிம்சாய், நவீத் சத்ரான்.