கனடாவில் விமானமொன்றில் பயணி ஒருவரின் அலைபேசி காணாமல் போயுள்ளது. Olu Awoseyi என்ற பயணியின் விலை அதிகமான அதி நவீன அலைபேசி ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றார்.
டொமினிக்கன் தீவுகளில் விடுமுறையை கழித்து விட்டு எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அவோசி குடும்பம் நாடு திரும்பியுள்ளது. நாடு திரும்பிய போது தனது அலைபேசி காணவில்லை என்பதனை அவோசி உணர்ந்துள்ளார்.
அலைபேசியில் காணப்படும் பாதுகாப்பு செயலி ஊடாக அதனை தற்பொழுது யார் வைத்திருக்கின்றார்கள் என்பதனை கண்டு பிடிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அலைபேசி தொலைந்ததன் பின்னர் அதனை விமான சேவைப் பணியாளர் ஒருவரே வைத்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயம் தொடர்பில் விமான சேவை நிறுவனம் எவ்வித பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.