ரொறன்ரோவில் ரயிலில் மோதுண்டு இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அப் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதுண்ட ஓரு ஆணும் ஒரு பெண்ணுமே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் மேற்கு பகுதியில் இரவு பத்து மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரயிலில் மோதுண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். என்ன காரணத்தினால் எப்படி இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரயிலில் மோதுண்டு இரண்டு பேர் பலியானதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாரிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.