கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறைச்சாலைகள் உருவாக்கப்படும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ சிறைச்சாலைகளில் அதிக கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் அவற்றில் சனநெரிசல் நிலவுகின்றது.
சிறைச்சாலைகளில் நிலவும் சனநெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் கூடுதல் சிறைச்சாலைகள் நிர்மானிக்கப்படும் என முதல்வர் போர்ட் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் எண்ணிக்கையில் சிறைகள் அமைத்து அவர்கள் தடுத்து வைக்கப்படுவர் என்றும், நீண்ட காலத்திற்கு சிறையில் தடுத்து வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் கடந்த 2023ம் ஆண்டில் சிறைச்சாலைகளின் மொத்த கொள்ளளவு 7848 என்ற போதிலும், 8889 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.