வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கண்டி மகாமாயா மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் முதலிடத்தில் இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று (01) தெரிவித்தார்.
பெறுபேறுகளின் பிரகாரம் 245,521 மற்றும் 72.07 சதவீதமானோர் உயர்தரத்திற்கு பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டில் இது 62.63 சதவீதமாக இருந்தது. 13,588 பேர் அனைத்து பாடங்களிலும் ‘ஏ‘ சித்திப் பெற்றுள்ளனர்.
இந்த பெறுபேறுகளின் படி கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலய மாணவி ஒருவர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி ஒருவர் பெற்றுக்கொண்டார். மூன்றாம் இடத்தை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவர் ஒருவர் பெற்றுள்ளார்.
4ம் இடம் பெற்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கம்பஹா சிறி குருசா பெண்கள் கல்லூரி.
ஆறாவது இடங்கள் நான்கு உள்ளன. அவற்றுள் இரண்டு காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி, குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரி, திருகோணமலை ஸ்ரீ சண்முகம் பெண்கள் கல்லூரி, கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் பெண்களுக்கான கண்டி உயர்தரப் பாடசாலை ஆகியன பத்தாவது இடத்தில் உள்ளன.