தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று (02) இரவு வரை வட அகலாங்கு 11.2° மற்றும் கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில், யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள இடத்திலிருந்து நகர்கிறது.
இது நாளை (04) ஆகும் போது இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை (05) தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.