ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரத்தில் பசுமையான மாற்றத்திற்கான யோசனைகள் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்துடன் பிரான்சின் உறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
டுபாயில் நடைபெறும், கொப் 28 எனப்படும் 28 ஆவது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனை சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.