நாடாளுமன்றத்திற்கு செல்லும் பிரதான வீதியில் உள்ள சுற்றுவட்டத்தில், ஜே.வி.பியின் மகளிர் அணியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்து கலைத்துள்ளனர். இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
பொல்துவ சந்தியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பெண்கள் அணியினர் மீதே இவ்வாறு பொலிஸார் தண்ணீரை பீச்சியடித்து கலைத்துள்ளனர். இதனால் கலைந்து சென்ற ஒருசிலர், மீண்டும் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பு, வறிய மக்கள் மீது வரிஅதிகரிப்பு போன்றவற்றிற்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.